பெண் மீது வாகனம் மோதி பலி..!
மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் கொங்குபட்டியை சேர்ந்த பாலமுருகன் விஜயலட்சுமி தம்பதியினர் கூலி வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சில்லாப்பட்டி விளக்கு அருகே மதுரை மெயின் ரோட்டை கடந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பாலமுருகன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் மீது வாகனம் மோதிய சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




