--- --:--:-- --

ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்த பெண்..!

3

கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் அட்டைப்பாடியை சேர்ந்த மருதர் அவரது மனைவி மஞ்சு. இவரது குழந்தைக்கு பிறந்தநாள் சான்றிதழ் பெற மருதர் மற்றும் மஞ்சு 25ஆம் தேதி கோவை வந்தனர்.

 

பின்னர் வேறு ஒரு பேருந்து மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அலுவலகம் வருவதற்கு முன்பே மஞ்சு இறங்கி படிக்கட்டுக்கு வந்துள்ளார். பேருந்து ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயிலின் அருகே வந்த பொழுது திடீரென ஓடும் பேருந்தில் இருந்து அவர் கீழே குதித்தார்.

 

இதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் அந்த பகுதியாக வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர். அவருக்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

விசாரணையில் கணவர் இறங்கியதாக எண்ணி மஞ்சு பேருந்தில் இருந்து கீழே குதித்ததாக தெரிகிறது. தற்பொழுது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon