--- --:--:-- --

கணவன் இறந்த பின் மாமியார் துன்புறுத்தியதால் தனது 3 குழந்தைகளுடன் பெண் தற்கொலை..!

4.1

சிவகங்கை மாவட்டத்தில் கணவர் இறந்த நிலையில் மாமியார் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால் மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவகோட்டை சிதம்பரநாத புரத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

இந்த நிலையில் கணவர் இறந்து விட்டதால் அவரது மனைவி பிரியதர்ஷினி மற்ற மூன்று குழந்தைகளை வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி கடந்த 4ம் தேதி தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததோடு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

அதில் பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மூன்று குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon