வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை..! இறுதியாக பேசிய வீடியோ..!
கோவில்பட்டியில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பெண் இறுதியாக கண்ணீர் மல்க பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜா என்பவருக்கும் விருதுநகரை சேர்ந்த வீரராகவன் என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் வீரராகவன் தம்பிக்கு சுஜாவின் சகோதரியை பெண் கேட்டதாகவும் அதற்கு சுஜாவின் பெற்றோர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வீரராகவன் குடும்பத்தினர் சுஜாதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கணவன் குடும்பத்தாரின் தொல்லையில் இருந்து தப்பிக்க தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்த சுஜா மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






