--- --:--:-- --

கையால் தள்ளினால் இடிந்து விழும் அவலம்.. கம்பிகளின்றி கட்டப்படும் இருளர் வீடுகள்..!

7

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே இருளர் பெருங்குடி மக்களுக்கு தர மற்ற அரசு தொகுப்பு வீடுகள் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

கூவத்தூர் அருகே வடபழனி ஊராட்சியை வடபட்டினம் ஊராட்சியில் பழங்குடியின மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருளர் பழங்குடி மக்களுக்கு 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 21 வீடுகள் கட்டப்படுகின்றன.

 

இந்த வீடுகள் தரமற்று கட்டப்படுவதாகவும் கம்பிகளை கொண்டு தூண்கள் அமைக்காமல் ஒரு அடி ஆழம் மட்டும் தோண்டி வீடுகள் கட்டப்படுவதாகவும் பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 

எனவே இனியும் தாமதிக்காமல் துறை சார்ந்த அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் கட்டிடப் பணிகளில் ஆய்வு செய்து தொகுப்பு வீடுகளை தரமான முறையில் கட்டிக் கொடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon