தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம்..!
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற வளாகம் எதிரே மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து திடுதிப்பெனத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எச்சரிக்கையையும் மீறி உயர்நீதிமன்றம் எதிரே திரண்டு முழக்கங்களை எழுப்பியதால், சூழலைக் கட்டுப்படுத்த முயன்ற காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.






