கனவை நிறைவேற்றுவாரா? சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உங்கள் கனவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் என சொல்கிறார். ஆட்சியை போகின்ற நேரத்தில் இதுபோன்று ஒரு முதல்வர் சொன்னால், எனக்கு நயன்தாரா வேண்டும் கல்யாணம் செய்து வையுங்கள் என்று சொன்னால் எப்படி முடியும்? என்று ஜனநாயக கூட்டணி சார்பில் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசியது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அப்போது அ.தி.மு.கவினர் மத்தியில் பேசிய சி.வி.சண்முகம், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால், தமிழக முதல்வர் அதை விட ஒரு படி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் எனக் கூறுகின்றார். எனக்கு நயன்தாரா வேணும், கனவை நிறைவேற்றுவீர்களா? என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், ‘நயன்தாரவை திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள். இவர் நிறைவேற்றி வைப்பாரா?’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். c அவருடை இந்தப் பேச்சுக்கு அ.தி.மு.க-வினர் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.






