--- --:--:-- --

சி.பி.ஐ அண்ணன் குடுமியை பிடிச்சு ஆட்டும் – சீண்டிய ஜூலி

5

.வெ.க தலைவர் விஜய் குறித்து தொடர் விமர்சனங்களை கொடுத்து வரும் பிக்பாஸ் ஜுலி தற்போது, அவர் பா.ஜ.க.வின் பி.டீம் இல்லை ஏ டீம் தான் என்று வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், த.வெ.க தொண்டர்கள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

சமீபத்தில் வேலூரில் நடந்த த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய விஜய், காளை மாடு வைத்து குட்டி ஸ்டோரி ஒன்றை கூறியிருந்தார். இதற்கு த.வெ.க தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைத்திருந்தாலும், பிக்பாஸ் ஜூலி, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்புபடுத்தி, இன்னொரு முறை ஜல்லிக்கட்டுக்காக போராட தெம்பு இல்லணே என்று பேசி கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

 

இதற்கு த.வெ.க தொண்டர்களும் ஜூலி மற்றும் அவரது குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜய் பாணியில் ஒரு வீடியோவை வெளியிட்ட ஜூலி, விஜய் அண்ணா, நான் என் வீட்ல இல்ல என் ஆபீஸ்ல தான் இருப்பேன் என்னிடம் மோதுங்கள் என்றெல்லாம் பதிவிட்டிருந்தார்.

 

இதற்கும் த.வெ.க தொண்டர்கள், பதிலடி கொடுத்திருந்தனர். இதனிடையே, சமீப காலமாக தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் ஜூலி, ஒரு மேடையில், பல திரை தளபதிகள் இங்கு வந்து ஸ்டேட்டை ஆட்டையபோட பார்க்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருந்தார்.

 

இதனிடையே, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்த ஜூலி, அதில், கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற பொய்யான வீடியோக்களை வெளியிட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என தவெக நிர்வாகி உட்பட எட்டு பேர் மீது புகார் அளித்திருந்தார்.

 

இந்நிலையில் ஜூலி புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வணக்கம் மக்களே. சிலிண்டர் எல்லாம் வாங்கி வைத்துவிட்டீர்களா?.. மோடி இதிலும் நமது வயிற்றில் அடித்துவிடப்போகிறார். நம்ம விஜய் அண்ணா வழக்கம்போல் இதற்கும் எதுவும் பேசமாட்டார். அப்படி ஏதாவது பேசினால் மோடி ஜி சிபிஐயை வைத்து விஜய் அண்ணாவின் குடுமியை ஆட்டிவிடுவார். பா.ஜ.க.வுடன் த.வெ.க சேருமா என பேச்சுக்கள் இருக்கின்றன. நானே சொல்கிறேன். கண்டிப்பாக அவர் சேரமாட்டார்.

 

ஏனெனில் பா.ஜ.கவை எதிர்க்கும் மாநிலம் தமிழ்நாடு. பா.ஜ.கவுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்பதை அவர்கள் செட் செய்வார்கள். கொள்கை எதிரியோடு சேரவில்லை பார்த்தீர்களா என்றுதான் அவர்களால் வாக்கு கேட்க முடியும். அதற்காக செய்யக்கூடிய ஜோக்தான் இது. இதை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள். நம் பேஸ்கட் பால் அண்ணா சரக்கு பாட்டிலை எடுத்துட்டு போய் மாட்டிக்கொண்டதாக சொல்கிறார்கள். எதற்கு அண்ணா இது?.. கட்சிக்கு அசிங்கம் இல்லையா?..

 

சட்டம் தன் கடமையை செய்யும். தீ பரவட்டும்.. வழக்கம்போல் வல்கர் வாரியர்ஸ் வந்து உங்கள் வன்மத்தை கக்கிவிட்டு செல்லுங்கள். தவெகதான் பாஜக. பாஜகதான் தவெக. விஜய் பாஜகவின் பி டீம் எல்லாம் இல்லை, ஏ டீம்தான்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு த.வெ.க தொண்டர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Right Menu Icon