--- --:--:-- --

அடிக்கடி செல்போனில் பேசிய மனைவி.. தேங்காய் உரிக்கும் ஆயுதத்தால் கொலை..!

9

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவர் மீனா என்ற பெண்ணை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளது. மனைவி அடிக்கடி செல்போனில் பேசி வருவதால் அவர் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தம்பதி இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அப்பொழுது ஆந்திரமடைந்த சுரேஷ் தேங்காய் உரிக்கும் ஆயுதத்தால் மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சுரேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon