--- --:--:-- --

லிப்ட் கேட்டு வந்த சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி..!

8

சென்னை வில்லிவாக்கம் பக்கத்தில் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருசக்கர வாகனத்தில் அழுதுகொண்டே சென்றுள்ளான். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

 

அப்பொழுது அந்த சிறுவன் சொன்ன செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது தான் ஒரு பள்ளியில் படிப்பதாகவும் அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் இருந்து லிப்ட் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

கொடுத்த நபர் சிறுவன் இறக்கி விட சொன்ன இடத்தில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டி சென்றது மட்டுமில்லாமல் அந்த நபர் தன்னிடம் அத்து மீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளான். இதனையடுத்து அந்த நபரிடம் சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர்.

 

ஆனால் அவர் வாயை திறக்காமல் அமைதியாக இருந்துள்ளார். இதனையடுத்து அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட பொதுமக்கள் அதிலிருந்து பாஜகவின் கொடிகள் மற்றும் பாஜக அம்பத்தூர் பகுதியை சேர்ந்த உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

 

அந்த அடையாள அட்டையை அம்பத்தூர் பகுதி பாஜக பூத் வலிமைப்படுத்தும் இயக்கம் எனக் குறிப்பிட்டு அதில் பாலச்சந்திரன் என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதை வீடியோ எடுத்த போது மக்கள் அருகில் இருந்தவாறு பாஜகவை சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பீங்களா என கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

 

Right Menu Icon