--- --:--:-- --

கணவனுக்காக கோவில் கட்டிய மனைவி..!

2

காதலுக்கு முடிவு இல்லை என்பதற்கு சான்றாக கணவனுக்காக மனைவி கோவில் கட்டிய நிகழ்வு ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி.

 

இவரின் கணவர் ஆந்திரத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார் தன்னுடைய கணவர் மீது பேரன்பு கொண்டிருந்த மனைவி அவர் மறைந்த பிறகு கணவர் மீதான அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.

 

பெண்கள் எப்பொழுதும் தங்கள் கணவரை வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பத்திரிகைகளில் படித்துள்ளார். கணவனுக்காக ஒரு கோயிலை கட்டியுள்ளார். கோயிலுக்குள் கணவரின் சிலையும் வைத்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து நாள்தோறும் கணவனின் கோயிலுக்கு சென்று வணங்கி வருகிறார் பத்மாவதி. மேலும் பிறந்தநாள் திருமணநாள் போன்ற சிறப்பு நாட்களில் கணவனுக்கு பிரசாதம் வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon