--- --:--:-- --

தமிழகம் முழுவதும் பரவலாக தொடரும் மழை..!

3

மிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் இரண்டு மணி நேரத்தில் மட்டும் 12 சென்டிமீட்டர் மழை பெய்ததால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

 

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே செவிலிமேடு உள்ளிட்ட இடங்களில் பெய்த கன மழையால் சாலைகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

 

அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Right Menu Icon