புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உடுக்கையுடன் பரதமாடி சாதனை..!
புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 2000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் உடுக்கை வாத்தியம் இசைத்துக்கொண்டே கடற்கரை சாலையில் பரத நாட்டியம் ஆடி புதிய உலக சாதனை படைத்தனர்.
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை அகாடமி சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சாதனை நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு உடுக்கை வாத்தியம் இசைத்து கொண்டே தொடர்ந்து எட்டு நிமிடம் நடனம் ஆடி புதிய உலக சாதனையை படைத்தனர்.
யூனிக் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.






