தமிழக – ஆந்திர எல்லையில் பரவலாக மழை..!
வேலூரில் தமிழக ஆந்திர எல்லையான பரதராமி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெளியில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஆந்திர எல்லையை ஒட்டிய பரதராமி, பூசாரி வலசை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




