பெண் ஆய்வாளர் மீது நடிகை அளித்த குற்றச்சாட்டு ..!
மணிகண்டன் மீதான மோசடி வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என சாந்தினி புகார் அளித்திருந்த நிலையில் காவல் நிலைய ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுதா முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் சுதா தற்போது தாம்பரம் காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு 214 ஆய்வாளர்களிடம் மாற்றத்தின் போது இந்த மாற்றம் நடந்துள்ளது. அவருக்கு பதிலாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த விஜயகுமாரி நியமிக்கப்பட்டார்.






