திமுகவை தவிர ஏன் மற்ற கட்சிகளை விமர்சிப்பதில்லை..!
ஈரோடு கூட்டத்தை அடுத்து, 55 நாட்களுக்கு இன்று பொதுவெளியில் வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதில், நான் எந்த கட்சியையும் ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை. மற்றவர்களை போல வெறுப்பு அரசியல் செய்ய வரவில்லை என்று உரைத்தார்.
மேலும், எங்க ஓட்டு எங்க உரிமை என்ற உறுதிமொழியை தொண்டர்களை எடுக்க வைத்தார். விஜய் வீட்டை விட்டு வெளியே வா என சொல்பவர்களுக்கு என் வீடு எது என தெரியுமா?” என்று கேள்வி எழுப்பிய விஜய், “தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலம். எனக்கு அதுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கின்றனர். அனைவரும் என் உறவு, என் சொந்தம். 8 கோடி மக்களுக்கு உடன் இருக்க போவது நான்தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “விஜய் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்டு வந்துள்ளேன். விஜய் அரசியலுக்கு வந்தது தப்பா? மற்ற கட்சிகள் கூட்டம் நடத்த இடம் கொடுப்பார்கள், ஆனால் நமக்கு இடம் தர மறுக்கிறார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் SOP என்பார்கள். ஆனால் இங்கு Stalin Sir operating procedure ஆக இருக்கிறது” என்று விமர்சித்தார்.
யாருக்கு ஓட்டு என கேட்டால், விஜய் என சொல்லுப்பா,சொல்லுமா என சொல்லும் கயூட்டான வீடியோவை பார்க்கிறேன். இதை தொடர்ந்து செய்யுங்கள், உங்கள் மொத்த குடும்பமும் தவெகவிற்கு ஓட்டு போடுவோம் என சொல்லுங்கள் என்று பேசினார்.
அவர்களின் இயலாமையை மறைப்பதற்காக A team, B team என சொல்கிறார்கள். காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கணக்கெல்லாம் இனி நடக்காது காசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் பணம் தான். பதிலுக்கு விசிலை ஊதி அனுப்புங்கள் என தெரிவித்தார்.





