அரைகுறை ஆடையுடன் இருக்கும் கடவுளை பார்க்கும்போது தோன்றாத வன்கொடுமை பெண்களை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது!
அரைகுறை ஆடையுடன் இருக்கும் கடவுளை பார்க்கும்போது தோன்றாத வன்கொடுமை எண்ணம் நம் சகோதரிகளை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்டு வரும் அவர் இன்றைய தினம் சென்னையில் அந்த கட்சியின் மகளிர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆடை காரணமாக கூறப்படுது தவறானது என்று குறிப்பிட்டார்.







