--- --:--:-- --

பெரம்பூரில் அ.தி.மு.க போட்டியிடாதது ஏன் – இ.பி.எஸ் விளக்கம

2

மிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.வு.க்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா 5 , ஜான் பாண்டியனின் ஐ.ஜே.கே.வுக்கு 2, த.ம.மு.க.வுக்கு 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

 

யார் யார் எந்த தொகுதியில் போட்டி என்ற விபரத்தை இன்று (மார்ச் 25) சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

 

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பெரம்பூர் தொகுதியில் அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மக்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு மட்டுமே எதிர்ப்பு ஓட்டு கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு கிடைக்காது என்றார்.

Right Menu Icon