பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை வீசி சென்றது யார்?
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே பிறந்து 15
நாட்களே ஆன குழந்தையை வீசி சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஏகாம்பரம் என்பவரது வீட்டு திண்ணையில் நள்ளிரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் பச்சிளம் குழந்தைகளை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தையை வீசிச் சென்றது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.






