--- --:--:-- --

முதலமைச்சரை சுற்றி வளைத்த தொண்டர் கூட்டம்..!

6

ரூர் சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்பளித்தனர். இன்று நடக்கும் நலத்திட்ட உதவிகள் விழாவிற்காக அவர் காரில் சென்றார்.

 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் வழியில் கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு சிறப்பான வரவேற்பளித்தனர். குளித்தலையில் தந்தையின் நண்பர் குடும்பத்தினரை கண்டு காரை நிறுத்தி முதலமைச்சர் நலம் விசாரித்தார்.

 

திருச்சியிலிருந்து குளித்தலை வழியாக காரில் சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் குளித்தலை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியபாளையம் பரிசல்துறை சாலை அருகே சென்ற பொழுது கருணாநிதி முதன்முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றபோது தேர்தலுக்காக பாடுபட்ட அவரது நண்பரான சாகிப் குடும்பத்தினரை பார்த்து பேசினார். அப்போது அவர்கள் நினைவு சின்னம் ஒன்றை .அளித்தனர்.

 

Right Menu Icon