--- --:--:-- --

இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

2

வெள்ள பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஒரிரு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகாக்களில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon