திமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும்? கனிமொழி எம்.பி. அப்டேட்
தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துகளைக் கேட்டறியும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்ட பிறகு, அது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும்.
தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, தேர்தல் அறிக்கை வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.





