--- --:--:-- --

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எப்போது..!

1

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை பொதுத் தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியுள்ளார்.

 

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வுகள் ஜனவரி மாதத்திலும் பொதுத்தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

 

இந்த கல்வியாண்டில் கொரொனா தொற்றின் பாதிப்பு காரணமாக இந்த நடைமுறை சாத்தியமில்லை எனக் கூறியுள்ள அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்தையும் கேட்க பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவித்தார்.

 

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படாது என சிபிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon