--- --:--:-- --

பிப்ரவரி 1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது

1

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப். தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்லாமல் வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரவும் வாட்ஸ்அப் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வாய்ஸ் கால், வீடியோ கால் என பல வசதிகள் வாட்ஸ் அப் செயலியில் உள்ளதால் ஏராளமானோர் அதை பயன்படுத்தி வருகின்றனர்.

 

பயனாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க அதன் மேம்பாடுகளும் அதிகரிக்கப்பட்டன. பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் மேலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் வாட்ஸ்அப் பயனாளர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது சில மாடல் போன்களில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாட்ஸ் அப் இயங்காது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

அதாவது ஆன்ட்ராய்டு 2.3.7 வெர்சன் மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஐபோன்களில் ஐஓஎஸ் 8 மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது. இதுமட்டுமில்லாமல் விண்டோஸ் போன்களிலும் வாட்ஸ்அப் சேவை செயல்படாது.

 

ஏற்கனவே நோக்கியா சீரிஸ் 40 இயங்குதளம் மற்றும் பிளாக்பெரி ஒஸ்,பிளாக்பெரி 10, ஆண்ட்ராய்ட் 2.1 மற்றும் 2.2, விண்டோஸ் போன் 7 மற்றும் ஐபோன் 3 ஜி‌எஸ் மற்றும் ஐஓஎஸ் 6 உள்ளிட்ட ஃபோன்களில் வாட்ஸ்அப் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் சில மாடல் போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுகிறது.

 

வாட்ஸ் அப் மூலம் செல்போன்கள் ஹேக்செய்யப்படுகின்றன என்றும் பலர் உளவு பார்க்கின்றனர் என்றும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்து வாட்ஸ்அப் பயனாளர்களை அதிர்ச்சியடைய வைக்கின்றன. அந்தவகையில் தற்போது சில மாடல் போன்களில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாட்ஸ் அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் அந்த மாடல் போன்களைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் சேவையை மேம்படுத்தி நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை கொடுத்துவரும் வாட்ஸ்அப் நிறுவனம் பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் சேவையை நிறுத்துகிறது.

Leave a Reply

Right Menu Icon