புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஆத்திரத்தில் பெண் செய்த காரியம்..!
ஆந்திராவில் காவல் நிலையத்தை பூட்டிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கௌதமி. கணவரை பிரிந்த இவர் தனது மகன் மற்றும் மகளுடன் ஆறாண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டை வெறுக்க உரிமையாளர்கள் முடிவு செய்ததால் 12 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வீட்டை வாங்கி கொடுத்ததில் கௌதமி முடிவு செய்துள்ளார். அதற்காக முன் பணம் 5 லட்சம் ரூபாயை கௌதமி வழங்கிய நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.
மேலும் 5 லட்சம் ரூபாயை தர மறுத்த வீட்டை பூட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் காவல்துறையினருக்கு தனது வலியை உணர்த்தும் வகையில் காவல் நிலையத்தை பூட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.





