நித்யானந்தா ஆசிரமத்தில் நடப்பது என்ன..? – மீட்கப்பட்ட சிறுமியின் அதிர்ச்சி தகவல்
ஆசிரமத்திற்கு நிதி திரட்டும் பணியில் குழந்தைகளை நித்தியானந்தா ஈடுபடுத்தியது உண்மைதான் என அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அவர் மீது குற்றச்சாட்டு வைக்கும் ஜனநாதன் ஷர்மா நித்யானந்தா பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும், அவரால் வெளிநாட்டவர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சைக்கோவாகிவிட்ட நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பவர்களையும் அவரைப்போல் மாற்ற முயற்சிக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி ஆசிரமத்தில் கல்வி முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் நித்யானந்தாவின் பெருமைகளை பேசி ஆசிரமத்திற்கு நிதி திரட்ட வற்புறுத்தப்பட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருவரின் கண்ணை பார்த்தே அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிவது எப்படி என நித்தியானந்தா கற்றுக் கொடுத்துள்ளார் என்றும் அதைப் பயன்படுத்தி நிதி திரட்டுவோம் ஒருவரிடம் குறைந்தபட்சம் மூன்று லட்சமாவது திரட்ட வேண்டும் என்றும் அந்த சிறுமி கூறியுள்ளார்.





