--- --:--:-- --

தமிழக – கேரள எல்லையில் சாலையிலேயே நடைபெற்ற திருமணங்கள்!

10

கொரோனா பொது முடக்கத்தால் கேரளா- திருப்பூர் எல்லையில் சாலையிலேயே 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கொரோனா பரவலும் அது தொடர்பான பொது முடக்கமும் பல விஷயங்களை மாற்றி உள்ளது. அதில் முக்கியமான ஒன்று திருமணம். ஆடம்பரத்தின் வெளிப்பாடாக இருந்த திருமண நிகழ்வுகளை கொரொனா எளிமை வடிவமாக மாற்றியுள்ளது.

 

கொரொனா அச்சுறுத்ததால் மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைபட்டுள்ளது. கேரளா – திருப்பூர் எல்லையில் சாலையில் வைத்து திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. திருப்பூரைச் சேர்ந்த 3 இளைஞர்களுக்கு கேரளாவை சேர்ந்த பெண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

 

கொரொனா பரவலால் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்த பெற்றோர் பெண்ணை திருமணம் முடித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவதற்காக காவல் மற்றும் சுகாதாரத் துறையின் உதவியை நாடினார். இரு மாநில எல்லையிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ள அதிகாரிகள் பச்சைக்கொடி காட்ட சின்னாறு சோதனைச் சாவடியை அடுத்த திருமண மண்டபமாக மாறியது.

 

அடுத்தடுத்து மூன்று மணமகன்களும், மணமகள்களும் தயாராக இருக்க உறவினர்கள், அதிகாரிகள் முன்னிலையில் சாலையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. உறவினர்களை மாநில எல்லைக்குள் அனுமதிக்காத காவல்துறையினர் மணமக்களை மட்டும் அவரவர் கணவர்களின் ஊருக்கு அனுப்பி வைத்தனர். ஒரு காலத்தில் பல திருமணங்கள் இதுபோன்று சாலையிலேயே நடப்பதாக கூறுகிறார்கள் இரு மாநிலக் காவல்துறையினர்.

Leave a Reply

Right Menu Icon