--- --:--:-- --

காவல் நிலையத்திற்குள் இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடலுக்கு டிக் டாக் செய்து வெளியிட்ட உதவி ஆய்வாளர்!

11

சென்னையில் டிக்டாக்கில் வரும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களுக்கு வாய் அசைத்து காவல் நிலையத்திலேயே தனது நடிப்பு திறமையை காட்டி வரும் உதவி ஆய்வாளரின் செயல் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

 

சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கல்யாணசுந்தரம் என்று அந்த உதவி ஆய்வாளர் கடந்த ஓராண்டாக இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றி வருவதாக கூறப்படுகிறது.

 

கொரோனா பரவி வரும் சூழலில் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் கூட ஒரு நாளைக்கு 20 க்கும் மேற்பட்ட பாடல்களை டிக்டாக்கில் சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய எஸ்‌ஐ அப்லோடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon