சாதாரண மாஸ்க் அணிவது பயனற்றது… அமெரிக்க ஆய்வில் தெரிவிப்பு..!
கொரொனா நோய் தொற்றை தடுக்க சாதாரண மாஸ்க் அணிவதால் எந்தவித பயனும் இல்லை என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனாவை தடுப்பதற்கு முககவசம், கைகளை சுத்தம் செய்தல், ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் குறைந்தது ஆறு அடி தூரம் என்று சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை முக்கிய மாக கருதப்படுகின்றன.
இதனால் உலகம் முழுவதும் முக கவசங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் சாதாரணமான முக கவசத்தால் பயனில்லை என்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரண்டடுக்கு கொண்ட மெல்லிய பருத்தித் துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நன்கு பொருந்தும் மாஸ்குகள் மட்டும் தான் ஓரளவிற்கு இருமல் மற்றும் தும்மல் மூலமாக பரவும் நீர்த் திவலைகளை தடுத்து நிறுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த வித மாஸ்காக இருந்தாலும் அது 100 சதவீத பாதுகாப்பை தராது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.






