--- --:--:-- --

தெரு தெருவா இறங்கி வேலை செய்றோம்.. பயங்கரமான நோய்கள் பரவுது..!

10

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தெரு தெருவாக இறங்கி மாநகராட்சி அதிகாரிகள் வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜே. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

 

மேலும், சென்னையில் வெள்ளம் வடிந்த போதிலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் ஆகியவை பரவக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மிக்ஜாம் புயல் ஆடிய கோரத்தாண்டவத்தின் வடுக்கள் இன்னும் வட தமிழகத்தை விட்டு அகலவில்லை.

 

குறிப்பாக, சென்னை மிக மோசமான பாதிப்பை சந்தித்திருக்கிறது. பல இடங்களை மழை வெள்ளம் மூழ்கடித்துச் சென்றது. இருந்தபோதிலும், அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் அடுத்த சில தினங்களிலேயே மழை வெள்ளம் வடிந்தது.இப்போது சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும், சுரங்கப்பாதைகளும் செயல்பாட்டு வந்துவிட்டது.

 

அதே நேரத்தில், பல இடங்களில் காலி மனைகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. சாக்கடை நீரும் வருகிறது. இப்படி தண்ணீர் தேங்குவதால் எல்லோரும் இப்போது டெங்கு காய்ச்சல் மட்டும் தான் வரும் என்று நினைக்கிறார்கள்.

 

அப்படி கிடையாது. தோல் நோய்கள், பூஞ்சை நோய்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள், தண்ணீரால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவக்கூடும். மேலும், தேங்கிய தண்ணீரில் இறங்கி நடந்தால் எலி காய்ச்சலும் வரும்.அதனால் மாநகராட்சி சார்பில் இதற்கான தடுப்பு மாத்திரைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

குழந்தைகளுக்கும் மருந்து கொடுக்குறோம். எல்லா இடங்களிலும் இந்த மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon