பீகார் தேர்தலில் எங்களுக்கே வெற்றி கிடைக்கும்: ராகுல்
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இம்முறை ஒற்றுமையுடன் நாங்கள் போட்டியிடுவதால் எங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பாஜக, தேர்தல் ஆணையம் இணைந்து மக்களின் வாக்குகளை திருட பார்க்கிறது. இங்கு இதை அனுமதிக்க மாட்டோம் என்றார்.





