--- --:--:-- --

அண்ணாமலைக்கு நாங்கள் துணை நிற்போம் – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் X தளத்தில் பதிவு

10

ண்ணாமலை குறித்த ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அண்ணாமலைக்கு கட்சி, அரசியல், கொள்கை, கோட்பாடு அனைத்தையும் கடந்து தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.

 

மும்பை மராத்தியர்களின் நகரம் அல்ல, பன்னாட்டு நகரம் என்று பேசியது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்தாகும். அதை ஏற்பதும், எதிர்ப்பது அவரவரின் சனநாயக உரிமை.

 

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் அண்ணாமலை மும்பையில் கால்வைத்தால் வெட்டுவேன் என ராஜ் தாக்கரே பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சீமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon