ஐதராபாத் சிறுவனுக்கு 16 கோடி ரூபாயில் தடுப்பூசி..!
சிக்கலான மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த 3 வயது சிறுவனின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த அய்நாஸ் குப்தா என்ற 3 வயது சிறுவன் முதுகெலும்பு இயக்கத்தை பாதிக்கும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவனுக்கு சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசியை செலுத்தினால் குணமாக்கலாம் என மருத்துவர்கள் கூறிய நிலையில் அதற்கான நிதியை அவரது குடும்பத்தினர் சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
சுமார் 62 ஆயிரம் பேர் 14 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்கிய நிலையில் மீதமுள்ள ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் சர்வதேச அளவில் திரட்டப்பட்டது. சிறுவனின் நிலையை கவனத்தில் கொண்ட மத்திய அரசு ஊசிக்கான 6 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 16 கோடி ரூபாய் மதிப்பிலான சிறுவனுக்கு போடப்பட்டுள்ளது.







