பாகிஸ்தான் மீது போர் தேவையற்றது: திருமாவளவன்
பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதனை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு எதிரான யுத்தம் தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடு அல்லாமல், இந்தியர் என்ற உணர்வோடு நாம் அனைவரும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.





