மகாராஷ்டிரா, ஜார்கண்டில் நாளை வாக்குப்பதிவு
மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 20) நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல, ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நாளை நடைபெறவுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




