--- --:--:-- --

மொழியியல் கொடுங்கோன்மையை திரும்பப் பெறுக.. – முதலமைச்சர்

1

ந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி. இருந்து வருகிறது. பல்வேறு திட்டங்களின் மூலமாகவும், மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றதன் மூலமாகவும் 1956ல் துவங்கி தற்போது வரை அதன் சேவையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

 

இந்நிலையில், இன்று காலை திடீரென எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையப் பக்கம் முழுவதுமாக இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மொழி தேர்வு செய்வதும்கூட இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. இதனால், இந்தி அறியாத மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

 

இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “எல்ஐசி இணையதளம் தரம் குறைந்து இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம் என்பதை தேர்வு செய்வது கூட இந்தியில் காட்டப்படுகிறது.

 

பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவின் மீது பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழித் திணிப்பை ஏற்படுத்துகிறது. அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது எல்ஐசி. அதன் பெரும்பான்மை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய எப்படித் தைரியம் வந்தது? உடனடியாக இந்த மொழியியல் கொடுங்கோன்மையை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

 

எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்புநிலை மொழியாக இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.

Right Menu Icon