திமுக வேட்பாளரை ஆதரித்து கருணாநிதி போல வேடமணிந்து வாக்கு சேகரிப்பு..!
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி போன்று ஒருவர் வேடமணிந்து வாக்கு சேகரித்த நிகழ்வு அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராக உள்ள சுப்ரமணியன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் சைதாப்பேட்டை பகுதியில் கருப்பு கண்ணாடி, கழுத்தில் மஞ்சள் கலர் துண்டுகளில் திமுக தொண்டர் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் வேடமணிந்து மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கோரினார். அவரின் பிரச்சாரம் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.






