--- --:--:-- --

திருமணமாகி 2 மாதத்தில் கர்ப்பம் தரிக்கவில்லை என்பதால் கொலை..!

11

திருமணமாகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் தரிக்க வில்லை என கூறி மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை நியூ எல்லீஸ்நகர் ஆர் சி சர்ச் தெரு பகுதியை சேர்ந்தவர் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

 

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டை பகுதியைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. பெண் வீட்டில் திருமணத்தின் போது வயதை குறைத்து சொல்லி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

 

ஆனால் ஆணின் வயதைவிட சுதாவின் வயது அதிகமாக இருக்கவே திருமணமான நாளிலிருந்து பிரச்சினையும் இருந்துள்ளது. இதனிடையே குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி எடுத்த போதிலும் சுதா கர்கர்ப்பம் தரிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் நாகவேல். தன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

இதனிடையே தன் கணவர் வீட்டில் நடக்கும் கொடுமைகளை எல்லாம் தன் தாயிடம் சொல்லி கதறி அழுதுள்ளார் சுதா. மேலும் தன்னை உடனே அழைத்து செல்லுமாறு கதறி இருக்கிறார் அவர். இந்த சூழ்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை அதிகமாகவே சுதாவின் கழுத்தை நெரித்து நாகவேல் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மகள் போன் செய்ததால் மனம் பொறுக்க முடியாமல் அவரை அழைத்து செல்ல வந்த சுதாவின் தாய் மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளார். இதனிடையே மனைவியை கொன்று விட்டதாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார் கணவர். எனவே, கணவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon