கருக்கலைப்புக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல்.. மயக்க மருந்து கொடுத்த மருத்துவர்..!
கருக்கலைப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிடம் மயக்கவியல் மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த பெண் மீது கருவுற்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கருவை கலைக்க முடிவு செய்தார். அதன்படி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அவருக்கு கருக்கலைப்பு சிகிச்சை நடைபெற்றது.
சிகிச்சை முடிந்து இரவோடு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பெண் மருத்துவமனையில் மயக்க மருந்து அளித்த மருத்துவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கணவரிடம் கூறி உள்ளார். இது தொடர்பாக வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
அதன் பேரில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





