விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்கள் ரத்து
திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயில்கள் 4 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி -விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகிய இரு ரயில்களும் ஜூன் 26,27,28, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.





