விஜயகாந்த் பாணியில் மேடையில் பேசிய விஜய பிரபாகரன்..!
தேமுதிக அங்கீகாரம் பெறாத கட்சி எனக் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பதில் அளித்துள்ளார்.
தேமுதிகவின் முரசு சின்னத்தை கொடுப்பார்களா என்று சீமான் கூறுகிறார். திமுக அதிமுகவுக்கு பிறகு தேமுதிக தான் தமிழ்நாட்டில் அங்கீகாரம் உள்ள கட்சி என அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் கேட்டாலும் நாங்கள் விரும்பினாலும் தேர்தல் ஆணையம் சீமானுக்கு முரசு சின்னத்தை கொடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த சின்னம் முரசு சின்னம் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.





