விஜய் பிரச்சாரம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
அண்மையில் நடிகர் விஜய், தனது கட்சியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு அசௌகரியம் உண்டாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கட்சிப் பிரசாரங்களின்போது, பொதுச் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்கள், போக்குவரத்து இடையூறுகளால் ஏற்படும் இழப்பீடுகளைக் கருத்தில்கொண்டு, அதை ஈடுகட்டும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக (டெபாசிட்) செலுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விதிமுறைகள் நடிகர் விஜயின் கட்சிக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.






