--- --:--:-- --

புகைப்படக்காரரை மணமகன் அடிக்கும் வீடியோ திரைப்பட காட்சியாம்..!

12

ணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் அதற்கான உண்மையான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

 

அண்மையில் வெளியான வீடியோவில் மணமகனும் மணமகளும் திருமண கோலத்தில் மணமேடையில் நின்றிருக்க அவர்களை போட்டோ எடுத்த புகைப்படக்காரர் பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததுடன் மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்கச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

அப்போது அருகில் இருந்த மணமகன் கடுப்பாகி அந்தப் புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மன மேடையில் இருந்து வெளியேறுமாறு கூறுவார். மணமகனின் இந்த செயலை பார்த்து வருத்தமோ கோபமோ இல்லாத மணமகள் எழுந்து வாய் விட்டு சிரிக்கும் காட்சி இணையத்தில் வெளியானது.

 

மணமகனின் செயலால் கோபம் கொள்ளாமல் சிரிப்பை வெளிப்படுத்திய மணமகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். மணமகன் அடித்ததும் போட்டோ எடுத்த புகைப்படக்காரரும் கோபம் கொள்ளாமல் சிரிப்பை வெளிப்படுத்தினார்.

 

இந்த நிலையில் அங்கு நடந்தது உண்மை திருமணமா அல்லது நாடகமா என்று கேள்வி எழுந்த நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் மனமாக சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நடிகை என்பது தெரியவந்துள்ளது. திரைப்படத்தில் நடித்த காட்சிகள் அது என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon