--- --:--:-- --

ஆடையின்றி வீடியோ கால்.. காதலன் கொடுத்த டார்ச்சர்..!

10

டேட்டிங் செயலி மூலமாக புதுச்சேரி பெண்ணிடம் பழக்கம் ஏற்படுத்தி நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய சென்னை இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரை சேர்ந்த லலிதா என்ற பெண் டேட்டிங் செயலி மூலம் சென்னையை சேர்ந்த திலீப்குமார் என்று இளைஞரிடம் செல்போனில் பேசி காதலர்களாக பழகி வந்துள்ளார்.

 

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் லலிதாவிற்கும் டேவிட் குமாருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதை எடுத்து நண்பர்களாக பேசிக் கொள்ள அந்த பெண் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்தவர் ஆடையின்றி வீடியோ கால் பேசுமாறு கூறியதால் லலிதா வீடியோ கால் பேசிய நிலையில் அதனை இளைஞர் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்துள்ளார்.

 

பின்னர் அதை இளைஞர் நிர்வாண வீடியோவை லலிதாவின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய உள்ளதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லலிதா இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கழகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon