தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயன் அளிக்கவில்லை – பாகிஸ்தான் தெரிவிப்பு..!
சீனாவின் சீனா ஃபார்ம் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பயன் அளிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சீனாவின் சீனோபாம் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன் அளிக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சீனா சீனோபாம் என்ற தடுப்பூசியை கடந்த திங்கள்கிழமை வழங்கியது. சீனா வழங்கிய 5 லட்சம் தடுப்பூசிகள் கொண்ட பாகிஸ்தான் நேற்று முன்தினம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வல்லுநர் குழுவின் முதற்கட்ட ஆய்வில் சீனாவின் சீனோபாம் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயனளிக்கவில்லை என பரிந்துரை செய்துள்ளதாக பிரதமருக்கான சுகாதார சிறப்பு உதவியாளர் பைசர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
அந்த குழு 18 வயதிலிருந்து 60 வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்துள்ளது. பாகிஸ்தான் அரசு ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆக்ஸ்போர்டு, அஷ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.






