ஜீரண மண்டல பாதிப்புக்கு தடுப்பூசி அவசியம்..!
சென்னை, திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாறுபாடு, சுகாதாரமற்ற குடிநீர், அசுத்த உணவு ஆகியவற்றால் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். காய்ச்சிய நீரை பருகுவதுடன், கல்லீரல் அழற்சியை தடுக்க HEPATITIS A, TYPHOID தடுப்பூசி அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.






