--- --:--:-- --

உத்தராகண்ட் முதல்வர் இன்று பதவியேற்பு..!

6

த்தரகாண்டில் முதலமைச்சராக புஷ்கர்சிங் இன்று பதவியேற்றுக் கொள்கிறார். டேராடூனில் உள்ள மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் புஷ்கர் சிங் உடன் 10 அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாக உத்தரகாண்ட் மாநில பாரதிய ஜனதா தலைவர் மதன் கௌசிக் தெரிவித்துள்ளார்.

 

இன்று பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் புதியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டா, அசாம், உத்திரபிரதேசம், இமாச்சல பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

பதவியேற்பின் போது 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Right Menu Icon