--- --:--:-- --

தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

1

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 8 ஆம் தேதி மதுரை வர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார். குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த அமித் ஷா, அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.

 

இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழ்நாடு வர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் வரும் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

இதில், பாஜக வெல்வதற்கு வாய்ப்புள்ள தொகுதிகள், தேர்தல் பரப்புரை வியூகங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடத்தப்பட்ட நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு அமித் ஷா மதுரைக்கு வருவது கவனம் பெற்றுள்ளது.

 

மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தற்போதைய நிலை குறித்தும், தேமுதிக, பாமக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு எடுக்கப்போகும் முடிவுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon