--- --:--:-- --

சவால்களை எதிர்கொள்ள ஐ.நா’ சபையில் சீர்திருத்தங்கள் தேவை-பிரதமர் மோடி பேச்சு

10

க்கிய நாடுகள் சபையின் 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் உயர்மட்டக் கூட்டம் கொரோனா தொற்றின் காரணமாக காணொளி மூலம் நடைபெற்றது.

 

இதில் பேசிய பிரதமர் மோடி அனைத்து நாடுகளும் சமகால சவால்களை சந்திக்கும் வகையில் திறன் மேம்பட வேண்டும் என்று குறிப்பிட்டார் மனித நலன் கவனம் செலுத்தும் சீர்திருத்த பன்முகத்தன்மை தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார். ஐநா சபையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி ஐநா கொடியின் கீழ் அமைதிகாக்கும் பணிகளையும் மேம்பாட்டு பணிகளையும் வெகுவாகப் பாராட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர் வளர்ச்சியை உறுதி செய்வதிலும் மோதலை தடுப்பதிலும் இந்தியா உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதிலும் சமத்துவமின்மையை குறைப்பதிலும் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதிலும் இந்தியா வெகுவாக முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

காலாவதியான கட்டமைப்புகள் உடன் இன்றைய சவால்களை எதிர்த்துப் போராட வேண்டியது தான் அவசியத்தை கோடிட்டுக் காட்டிய மோடி விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா சபை நெருக்கடியை எதிர் கொள்கிறது என்றும் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon