ஆயுர்வேத கொரொனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஆயுர்வேத கொரொனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி மற்றும் ஸ்ரீமதி ஆயுர்வேத கேருடன் இணைந்து எதிராஜ் கல்யாண மண்டபத்தில் 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சை மையத்தை அவர் திறந்து வைத்துள்ளார்.
திருவல்லிக்கேணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலிருந்து நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த வாகனங்கள் மூலம் முட்டை, பிரெட் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.






